ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க டாக்டர் ராமதாஸ் நிபந்தனை

காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு மாதத்தில் அமைப்போம் என்று அறிவித்தால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும்படி அக்கட்சித் தலைவர்கள் கோரினர். இதுகுறித்து, பா.ம.க. உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் விவாதித்து தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஆணையை செயல்படுத்த ஒப்புக்கொண்ட மத்திய அரசு, கர்நாடகத்தின் அழுத்தத்திற்கு பணிந்து அடுத்த 3 நாட்களில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
இன்றைய நிலையில் உழவர்களின் துயரம் தான் தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக மாறிவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 10 பருவங்களில் 3 சம்பா பருவங்களில் மட்டும் தான் ஓரளவு சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் துயரத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதது தான்.
அடுத்த ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பா.ஜ.க. தலைமை அறிவித்தால் அதை ஏற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பா.ம.க. ஆதரவளிக்கும்; இல்லையேல் ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story