மத்திய–மாநில அரசுக்கு, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் அவ்வப்போது திருட்டு, கொலை–கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறை சட்டப்படி தீவிர நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இந்த சூழலில் தமிழகத்தில், சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது. எனவே தமிழக அரசு சட்டம்–ஒழுங்கு பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் எந்தவிதமான பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்காத வகையில் மத்திய–மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.