நாளை நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் ‘வாபஸ்’
வருகிற 11–ந்தேதி 5 டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
சென்னை,
டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணியை வரன்முறை செய்யவேண்டும். அரசு ஊழியருக்கு இணையான ஊதியம், வார விடுமுறை வழங்கவேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு துறைகளில் கல்வித்தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை(செவ்வாய்க்கிழமை) 5 டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து அந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர் (பணியாளர் நலன்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உபரியாக உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும், இதர கோரிக்கைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதை ஏற்றுக்கொண்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, நாளை நடைபெற இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Related Tags :
Next Story