ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்
ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு டி.டி.வி.தினகரனை ஏன் அழைக்கவில்லை?
பதில்:- இதுபற்றி அவரே ஏற்கனவே தெளிவாக கூறி இருக்கிறார். நல்ல ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்.
கேள்வி:- தமிழகத்திற்கு வரக்கூடிய பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறதே?
பதில்:- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.
கேள்வி:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதே?
பதில்:- ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். ஒரு சில இடங்களில் நீதிமன்ற வழக்கு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம்.ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- காவிரியில் கர்நாடக அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பீர்களா?
பதில்:- இதற்காக இப்போது சந்திக்க செல்லவில்லை. ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது இதுபற்றி வலியுறுத்தி கூறி இருக்கிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி நீர் பிரச்சினையில் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி அதை அரசிதழில் வெளியிட வைத்தார். ஆனால் காவிரி நீர் பிரச்சினைக்காக காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று குழுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு 11-ந்தேதி(நாளை) அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதில் தமிழக அரசு சார்பாக நமது வாதத்தை எடுத்து வைத்து வெற்றி பெறுவோம்.
கேள்வி:- காவல்துறையில் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளதே?
பதில்:- 2-ம் நிலை காவலர்கள் 13 ஆயிரத்து 200 பேரை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு முடிந்து உள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் சில காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story