அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி: டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன்


அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி: டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 16 July 2017 8:56 PM IST (Updated: 16 July 2017 8:56 PM IST)
t-max-icont-min-icon

அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அமைச்சர்களின் ஊழல் பற்றி நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்திய கருத்து தமிழக மக்களின் கருத்து என தெரிவித்து மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், என் ஆதங்களில் பல உங்கள் கோப செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்கு பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான்.  இதனை உணர மறுப்பவர்கள் தலைவராக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது.  பலிக்கவும் கூடாது என தெரிவித்துள்ளார்.


Next Story