தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  பழனியப்பனுக்கு  சி.பி.சி.ஐ.டி சம்மன்
x
தினத்தந்தி 22 July 2017 11:25 AM IST (Updated: 22 July 2017 11:25 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவக் கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் மரண வழக்கில் அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது.

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டில்  சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், சுப்பிரமணியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ-யான பழனியப்பன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஆவார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story