முதல்வர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது-அமைச்சர் ஜெயக்குமார்


முதல்வர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது-அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 1 Aug 2017 1:30 PM IST (Updated: 1 Aug 2017 1:30 PM IST)
t-max-icont-min-icon

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

 "எங்களைப் பொறுத்தவரை அம்மாவின் ஆட்சி முழுமையாக ஐந்தாண்டு காலம் தொடரும். வருகின்ற காலத்திலும் அம்மாவின் ஆட்சி தொடரும். அதற்கேற்ற வகையில்தான் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய இடமில்லை. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சி அலுவலகத்துக்குள் வழக்கம்போல் சென்று வருகிறோம். கட்சி அலுவலகத்துக்கு இன்று வழக்கம்போல் செல்கிறோம். இரு அணிகள் இணைப்பு விரைவில் நிகழும்" என்று கூறினார்.

கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வருவதாகக் கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என்றார் ஜெயக்குமார்.

Next Story