சசிகலாவை நீக்காவிட்டால் அ.தி.மு.க அணிகள் இணைய வாய்ப்பு இல்லை; கே.பி.முனுசாமி


சசிகலாவை நீக்காவிட்டால் அ.தி.மு.க அணிகள் இணைய வாய்ப்பு இல்லை; கே.பி.முனுசாமி
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 10–ந்தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் விண்ணப்ப மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பாக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் நீக்கவேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் அ.தி.மு.க. அம்மா அணியோடு இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் இணைப்பு பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story