முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேசினார்
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேசினார்
இதற்காக இன்று காலை சரத்குமார் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் எடப்பாடி பழனி சாமியை சரத்குமார் சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை சந்தித்தேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அனைவரும் அரசியலுக்கு வர வேண்டுமென நினைக்கிறேன். நடிகர் சங்கத்திற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்ற நடிகர் விஜய் -ன் கருத்தை வரவேற்கிறேன்.
Related Tags :
Next Story