மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளோம்: ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பேட்டி
மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அணிகளை இணைப்பதில் மத்திய பா.ஜனதாவின் தலையீடு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்படாதது பரபரப்பாக பேசப்பட்டது.
பிரதமரை சந்திக்க முடியாத நிலையில் ஷீரடி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இதற்கிடையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைத்ததையடுத்து, ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகள் மும்பையில் இருந்து நேராக டெல்லி சென்றனர். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை ஓ பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, ஓ பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளோம்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி–ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி பேசுவார்கள் என்றும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. மோடியை சந்தித்த பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி இறுதி கட்டத்தை அடையும் என்ற எதிர்பார்ப்பும் அ.திமு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story