விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு


விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு
x
தினத்தந்தி 14 Aug 2017 5:54 AM GMT (Updated: 14 Aug 2017 5:53 AM GMT)

விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

மதுரை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முதன்முதலாக பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்காக இன்று மதுரை வந்த டிடிவி தினகரன் அங்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:-

மாபெரும் மாநாடாக, பொதுகூட்டமாக  நடைபெற உள்ளது. இதற்காக கழக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். பல்வேறு இடையூறுகளை கடந்து  புரட்சி தலைவர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வெற்றி கூட்டமாக அமையும். அனைத்து கேள்விகளுக்கும் பொது கூட்டத்தில் பதில் கிடைக்கும். எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.  

என மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.  சுயநலத்திற்காக மற்றவர்களை காரணம் காட்டி கட்சியினரை ஏமாற்றுகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி அணியினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பழனிசாமி யார் என்பதை தெரிவிப்பேன்.

 மோசடி செயலுக்கு 420 என்று தான் நான் குறிப்பிட்டேன். பிரமாண பத்திரத்தில் ஒன்று, தீர்மானத்தில் ஒன்று என இருந்ததால், இது போன்ற மோசடி செயல்களுக்கு 420 என கூறினேன் . அதை கண்டு கொள்ளாமல் அதற்கு பதில் கூறி உள்ளார்கள்.

 எங்களால் முதல் அமைச்சராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எப்போது அறுவை சிகிச்சை தேவையை அப்போது செய்து கட்சியை காப்பாற்றுவோம்

ஏற்றிய ஏணியை மிதிப்பவர்கள் அவர்கள் அமைச்சராக காரணமாக இருந்தவர்களின் படங்களை அகற்றுகிறார்கள்.

பதவி இருப்பதால் அவர்கள் ஆட்டம் போடுகிரார்கள். அவர்கள் திருந்துவார்கள் என நம்புகிறேன் அல்லது திருத்தப்படுவார்கள்.

என்னுடன் தொடர்பில் உள்ள எம்எல்ஏக்களின் தொகுதியில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை.

முதலமைச்சரை 420 என கூறுவதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை, யாரை பார்த்தும் எனக்கு பயமில்லை.  இரட்டை இலை சின்னத்தை நாங்கள் கட்டாயமாக மீட்போம் இவ்வாறு அவர கூறினார்.

Next Story