ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ


ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 14 Aug 2017 6:03 AM GMT (Updated: 14 Aug 2017 6:03 AM GMT)

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.

சென்னை

அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவலையில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்தார்; ரஜினி மற்றும் கமல் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.ரஜினி, கமல் போன்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் கடை ஆரம்பித்து ஏற்பட்ட நிலைமையை ரஜினி, கமல் அறிய வேண்டும். தமிழக மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் என்ன செய்தார்கள்? தமிழக அரசியல் நிலைமை நன்றாக உள்ளது, முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறுஇனார்.

Next Story