தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை
சென்னை பட்டினபாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம், அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப தலையீடு இல்லாமல் தான் கட்சி, ஆட்சியை வழி நடத்தி வருகிறோம். பன்னீர்செல்வம் அணியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம்.
அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக அணிகள் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க விரும்பவில்லை.2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் நிக்கபட்ட டிடிவி தினகரன் எப்படி துணைப்பொது செயலாளராக முடியும். தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை, எனவே அவரின் பதவி செல்லுபடியாகாது. எம்.ஜிஆருக்கு க்கு விழா கொண்டாட நாங்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவேன் எனக்கூறிய மு.க.ஸ்டாலினை தினகரன் எதிர்த்து இருக்கவேண்டும். தினகரனுக்கு எதிரான தீர்மானத்தை அனைவரும் படித்து பார்த்தே கையெழுத்து போட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story