தினகரன் தவிர்க்க முடியாத தலைவர் மேலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்
தினகரன் தவிர்க்க முடியாத தலைவர்,அவருடைய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என மேலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
மேலூர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக டிடிவி தினகரன்பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் மதுரை மேலூரில் இன்று நடந்து வருகிறது. தலைமைக்கழகம் தோற்றத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ம் 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
தினகரன் தவிர்க்க முடியாத தலைவர், அவருடைய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.அதிமுகவில் தொண்டர்கள் தினகரன் தலைமையை ஏற்க செய்யவேண்டும்.
சசிகலா குடும்பத்தால் அதிகாரம் பெற்றவர்கள் எல்லோரும் அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள். என்று கூறினார்.
Related Tags :
Next Story