சுதந்திர தின விழா; தமிழக கவர்னர் வாழ்த்து


சுதந்திர தின விழா; தமிழக கவர்னர் வாழ்த்து
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேச விடுதலைக்காக வீரத்துடனும், தைரியத்துடனும் போராடி, தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், வீரம் கொண்ட நம் ராணுவ வீரர்களுக்கும் நாம் அனைவரும் மரியாதை செலுத்துவோம். நாம் வாழ்கிற இந்த பூமியும், பல்வேறு கலாசாரங்களும், நம் நாட்டின் தன்மையாக அமைந்துள்ளன. எனவே, நாட்டுப்பற்றையும், நம்முடைய உயர்ந்த கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், முன்னெடுத்து சென்று, எல்லா துறைகளிலும் நம் நாட்டை முன்னேற்றி, இந்த உலகத்தை வழிநடத்தி செல்லும் வகையில் நம் நாட்டை உருவாக்கவேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.  இவ்வாறு வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.


Next Story