உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்


உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 11:24 AM IST (Updated: 16 Aug 2017 11:26 AM IST)
t-max-icont-min-icon

காவேரி மருத்துவமனையில் உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திருப்பி உள்ளார்.


சென்னை, 

திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக காலை 6.40 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தரப்பில் சாதாரண பரிசோதனைக்காகவே கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலைக்குள் வீடு திரும்புவார். கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது. சிகிச்சை முடிந்ததும் கருணாநிதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்றி அமைக்கப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை சிறப்பாக முடிந்தது, அவர் தற்போது நலமாக உள்ளார் என கனிமொழி எம்.பி. கூறிஉள்ளார். 

Next Story