நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்: “ஓரு வருட வாய்ப்பு அவசர சிகிச்சையே”கமல் கருத்து


நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்: “ஓரு வருட வாய்ப்பு அவசர சிகிச்சையே”கமல் கருத்து
x
தினத்தந்தி 16 Aug 2017 9:07 PM IST (Updated: 16 Aug 2017 9:06 PM IST)
t-max-icont-min-icon

நீட் மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 6 துறைகளில் சட்ட அமைச்சகம் முதலில் ஒப்புதல்  அளித்தது.
ஓராண்டு நீட் விலக்கு அவசர சட்ட வரைவுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரத்துறை, மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில்  இது குறித்து நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நீட் மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. ஓரு வருட வாய்ப்பு அவசர சிகிச்சையே. இனி என்ன செய்வோம்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story