பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன; 18 விமானங்கள் தாமதம்


பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன; 18 விமானங்கள் தாமதம்
x
தினத்தந்தி 18 Aug 2017 3:15 AM IST (Updated: 17 Aug 2017 8:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.

சென்னை,

மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரை இறங்க முடியாததால் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல் தோகாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் தரை இறங்க முடியாமல் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

மேலும் டெல்லி, கொல்கத்தா, மதுரை, புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டியது மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டியது என 18 விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் வானிலை சீரானதும் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்க அனுமதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story