தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவில்லை: பா.ம.க.வில் இருந்து நான் ஏற்கனவே விலகி விட்டேன்
சேலம், ஓமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
பா.ம.க.வில் இருந்து விலகிய தமிழரசுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று ஜி.கே.மணி அறிவிப்பு கொடுத்து இருக்கிறார். மேலும் நான் பா.ம.க.வில் தொடர்ந்து நீடிப்பதாக கூறிக்கொண்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. இதனை ஜி.கே.மணி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
30 ஆண்டுகளாக ஜி.கே.மணியால் நான் பல துன்பங்களை அனுபவித்து விட்டேன். நான் ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து விலகி விட்டேன். இன்னும் வேறு எந்த இயக்கத்திலும் இணையவில்லை. எனவே நான் மீண்டும் பா.ம.க.வில் தொடர்வேன் என்ற சந்தேகம் ஜி.கே.மணிக்கு தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story