சசிகலா சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் விரைவில் சில ஆபரேஷன்கள் நடக்கும் டிடிவி தினகரன்
சசிகலா சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் விரைவில் சில ஆபரேஷன்கள் நடக்கும் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
பெங்களூர்
பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்தார் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அவசர கதியில் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக்க முயற்சி நடக்கிறது. வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக்குவது சுயநலத்திற்காக என்றால் சரியாக இருக்காது. சிலர் தங்களின் பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவே இணைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலத்தில், வியாபார நோக்கத்தோடு இணைப்பு ஏற்பட்டால் அதன் ஆயுட்காலம் நீடிக்காது.
நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிருபணமாகும். மேலூர் பொது கூட்டத்திற்கு 20 எம்.எல்.ஏக்கள் வந்தனர் அடுத்த பொது கூட்டத்திற்கு இன்னும் சிலர் வருவார்கள். "சிலிப்பர் செல்" போல் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், தேவைப்பட்ட நேரத்தில் ஆதரவாக வருவார்கள்.
சசிகலா சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் அடுத்து சில ஆபரேஷன்கள் நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story