செப். 12 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு


செப். 12 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு  டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 10:10 AM IST (Updated: 1 Sept 2017 10:10 AM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 12 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தபோது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை தொடங்கப்படும் என்று ஆர்.வைத்திலிங்கம் எம்பி கூறினார். வரும் 12-ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முதல்வர் பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது.

இக்கூட்டத்தில், சசிகலா தரப்பினரால் சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த  நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்குழுவை கூட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள  கொண்டாம். எந்த நோக்கத்திற்காக பொதுக்குழு கூட்டப்படுகிறது  என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது கழக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story