அனிதாவின் மரணத்தை ஸ்டாலின் அரசியலாக்க நினைக்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார்


அனிதாவின் மரணத்தை ஸ்டாலின் அரசியலாக்க நினைக்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 4 Sept 2017 12:10 PM IST (Updated: 4 Sept 2017 12:10 PM IST)
t-max-icont-min-icon

அனிதாவின் மரணத்தை ஸ்டாலின் அரசியலாக்க நினைக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை,

அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்டினபாக்கத்தில்  இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவி அனிதாவின் முடிவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும். நீட் விவகாரத்தில் தி.மு.க. 
ஒருங்கிணைக்கும் அனைத்து கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்-தி.மு.க.தான். எனவே அதைப்பற்றி பேச அவர்களுக்கு தகுதி கிடையாது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை நடை பெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இல்லாத டி.டி. வி.தினகரன் பொதுக்குழுவிற்கு வந்தால் நடவடிக்கை என்ற அறிவிப்பு எள்ளி நகையாடுவது போன்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story