நீட் தேர்வுக்கு எதிர்ப்பு மதுரையில் தமிழன்னை சிலை முன்பு மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தமிழன்னை சிலை முன்பு மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 4 வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய படி தமுக்கம் மைதானத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் நேராக அங்குள்ள தமிழன்னை சிலை பீடத்தில் ஏறி தமிழன்னை முன்பு முறையிடுவது போல மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
தகவல் அறிந்தததும் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒரு சில மாணவ, மாணவிகள் ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலரை போலீசார் விரட்டினர். தமிழன்னை சிலை பீடத்தில் ஏறி அங்கு கோஷ மிட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். தமுக்கம் மைதானம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story