பொதுமக்களை ஒன்று திரட்டி சட்டப்படி இந்த ஆட்சியை கலைக்க போராடுவோம் - மு.க ஸ்டாலின்
பொதுமக்களை ஒன்று திரட்டி சட்டப்படி இந்த ஆட்சியை கலைக்க போராடும் நிலைக்கு வருவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் வரை தி.மு.க. போராடும் என மு.க. ஸ்டாலின் கூறினார்.
தஞ்சையில் தி.மு.க. பெண் பிரமுகர் திருமணத்தை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது அவர் போசியதாவது:-
தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாமல் எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். ஏற்கனவே சேர்ந்து இருந்தவர்கள் பிரிந்து தற்போது சேர்ந்து உள்ளனர். இவர்கள் நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டார்கள். தமிழகத்தில் நிலையாக செயல்படும் ஆட்சி இல்லை.
நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு உண்டு. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர் அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி சார்பிலும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தோம்.
கவர்னர் அதற்கு செவி சாய்க்கவில்லை, தி.மு.க. எம்.பி.க்கள் சார்பில் ஜனாதிபதியிடமும் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என தற்போது கோரிக்கை வைத்துள்ளோம்.
பின்னர் காலக்கெடு விதிப்போம். அதற்கும் பதில் அளிக்கவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சட்டப்படி இந்த ஆட்சியை கலைக்க போராடும் நிலைக்கு வருவோம். மக்களுக்கு பணி செய்யவே தி.மு.க. ஆட்சிக்கு வர விரும்புகிறது.
விவசாயிகள் பிரச்சினை, கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினை, நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

Related Tags :
Next Story