முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம், இல்லையேல் வீட்டுக்கு அனுப்புகிறோம்: டிடிவி தினகரன்


முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம், இல்லையேல் வீட்டுக்கு அனுப்புகிறோம்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 11 Sept 2017 8:51 PM IST (Updated: 11 Sept 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம், இல்லையேல் வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று டிடிவி தினகரன் மதுரையில் பேட்டி அளித்தார்.

மதுரை,

டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற முயற்சிக்கிறோம். இல்லையேல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப  முடிவு செய்துவிட்டோம். ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு  நல்லதல்ல.

 தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். பொதுமக்களை ஏமாற்றி ஆட்சியை  தொடர்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்களே கருதுகின்றனர்.  தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். பதவி இல்லையெனில் ஓ பன்னீர் செல்வத்திற்கு தூக்கம் வராது” இவ்வாறு அவர் பேசினார். 


Next Story