நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? எச்.ராஜா டுவிட்டரில் காட்டம்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? எச்.ராஜா டுவிட்டரில் காட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 3:45 AM IST (Updated: 12 Sept 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

சென்னை, 

நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றும் இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் மனு அளிப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

டுவிட்டரில் அவர், ‘கவர்னருக்கு அழுத்தம் கொடுப்பதாலோ, வெற்று அச்சுறுத்தல்களை விடுவதற்கு பதிலாக மு.க.ஸ்டாலினே சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். இதனை கொண்டு வர அவர் ஏன் பயப்படுகிறார்?’ என்று கேட்டுள்ளார். 

Next Story