சட்டசபையை கூட்டினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும்- மு.க.ஸ்டாலின்


சட்டசபையை கூட்டினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Sept 2017 1:50 PM IST (Updated: 12 Sept 2017 1:50 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையை கூட்டினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பது கோரிக்கை. ஆனால் கவர்னர்  இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில்  திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தி.மு.க  செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது, சட்டமன்றத்தை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும். பெரும்பான்மை இருப்பதாக கூறும் முதல்வர் பழனிசாமி அதனை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story