புதிய வாகனங்கள் வாங்க லைசென்ஸ் கட்டாயம் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை


புதிய வாகனங்கள் வாங்க  லைசென்ஸ் கட்டாயம் உத்தரவுக்கு ஐகோர்ட்  இடைக்காலத் தடை
x
தினத்தந்தி 12 Sept 2017 3:17 PM IST (Updated: 12 Sept 2017 3:17 PM IST)
t-max-icont-min-icon

புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை

வாகன ஓட்டிகள் எப்போதும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செப்டம்பர் 6 ம் தேதி முதல் அமலானது. இத்துடன் புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்ன ஐகோர்ட்  புதிய வாகனங்கள் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தனர்.

இது குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story