தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி


தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 14 Sept 2017 2:03 PM IST (Updated: 14 Sept 2017 2:02 PM IST)
t-max-icont-min-icon

தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

சென்னை

எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விசாரணைக்கு  ஏற்றுக் கொண்டார்.

தினகரனை ஆதரிக்கும்  18 எம்.எல். ஏ.க்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படுமா என்று  அரசு தலைமை வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் சட்ட பேரவை செயலாளரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க  கூடாது  என்று தினகரன் ஆதரவு  எம்.எல். ஏ.க்களின் வக்கீல் வலியுறுத்தினார்.

Next Story