டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் எங்கள் அணிக்கு வருவார்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் எங்கள் அணிக்கு வருவார்கள் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
சென்னை
தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க செயல்தலைவர் மூளையில் வெப்ப சலனம் ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி உள்ளார்.
96 எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி நடத்திய திமுக எங்களை மைனாரிட்டி என்கிறது. 134எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்வர் பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு அவசியமில்லை.
திமுக தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிடுகிறார் . போராட்டங்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். தேவைப்படும் போது சட்டப்பேரவை கூட்டப்படும். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் எங்கள் அணிக்கு வருவார்கள். தாயிடம் கோபம் கொண்டு திரும்பி வரும் குழந்தை போல பிரிந்து சென்றவர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story