திமுக எம்.எல்.ஏ-க்களுக்குள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்று விடுவார்- அமைச்சர் ஜெயகுமார்


திமுக எம்.எல்.ஏ-க்களுக்குள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்று விடுவார்- அமைச்சர் ஜெயகுமார்
x
தினத்தந்தி 3 Oct 2017 12:01 PM IST (Updated: 3 Oct 2017 12:01 PM IST)
t-max-icont-min-icon

திமுகஎம்.எல்.ஏ-க்களுக்குள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்று விடுவார் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.


அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

சென்னை

இலங்கை வசமுள்ள 36 படகுகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஒரு படகுக்கு 5 பேர் வீதம், 3 வாரங்களில் அனைத்து படகுகளையும் கொண்டுவரத்திட்டம்.இலங்கை வசமிருக்கும் படகுகளில், முதற்கட்டமாக 42 படகுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா பரோலில் வந்தால் கூட அதிமுகவுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் வருவதை திமுக எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. திமுக எம்எல்ஏக்களுக்குள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார்.

புலிகேசி ஆட்சி நடைபெறுகிறது என கூறிய டிடிவி தினகரன் ஒரு புலிகேசி. சட்டத்திற்குட்பட்டு நடப்பவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் முதலமைச்சரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story