தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர் என சபாநாயகர் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டனர். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று சபாநாயகர் தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சதித்திட்டம் தீட்டினர். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசியதை ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார்.
Related Tags :
Next Story