2 வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த‌ம்: 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம்


2 வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த‌ம்: 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2017 8:47 AM IST (Updated: 10 Oct 2017 8:47 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 2- வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த‌ம் நீடிக்கிறது. இதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது

சென்னை,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம், சுங்கச்சாவடி கட்டணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. 

இதனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சரக்குகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கியது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிகள் மற்றும் பட்டாசுகளையும் கொண்டு செல்ல முடியாமல் அந்த பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் அந்த இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டனர். 2-வது நாளாக இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால், 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. 

Next Story