சிவகங்கை அருகே கார் கவிழ்ந்தது: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் பலி


சிவகங்கை அருகே கார் கவிழ்ந்தது:  முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் பலி
x
தினத்தந்தி 13 Oct 2017 3:45 AM IST (Updated: 13 Oct 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் பலியானார்.

சிவகங்கை,

ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினத்தை சேர்ந்தவர் தேவபாண்டியன்(வயது 54). இவர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் ஆவார். ராமநாதபுரத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

தேவபாண்டியன் வேலை தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் நேற்று சென்னைக்கு விமானம் மூலம் செல்ல இருந்தார். இதற்காக திருச்சி விமான நிலையம் செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். காரை பாஸ்கரன்(33) என்பவர் ஓட்டினார்.

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய தேவபாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

காயம் அடைந்த டிரைவர் பாஸ்கரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விபத்தில் பலியான தேவபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story