ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார் தெரிவிப்பது எப்படி?


ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார் தெரிவிப்பது எப்படி?
x
தினத்தந்தி 16 Oct 2017 8:19 AM GMT (Updated: 16 Oct 2017 8:18 AM GMT)

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அதிக கட்டணம் புகார் தெரிவிப்பது எப்படி?


சென்னை

விழாக்காலங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணம். ஆம்னி பேருந்துகளுக்கென முறையான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்காததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்  கூறி வருகின்றனர். சென்னை-மதுரைக்கு ரூ.900 முதல் ரூ.1,500 வரையிலும், சென்னை – கோயம்புத்தூர் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும், சென்னை – திருநெல்வேலி ரூ.1,000 முதல் ரூ.1,900 வரையிலும், சென்னை-தஞ்சை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குமுறுகின்றனர். வழக்கமான நாட்களில் இவற்றில் பாதி தொகையே பெரும்பாலும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் கிடையாது என தகவல்.மோட்டார் வாகன சட்டத்தில் அதிக கட்டணம் தொடர்பான விதி இல்லை".

ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தாலும் அதிகபட்ச அபராதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிரது. ".ஆம்னி பேருந்துகளுக்கு பெர்மிட் பெற ஒரு இருக்கைக்கு 3மாத கட்டணமாக ரூ.3000. *"ஒரு படுக்கைக்கு 3 மாத கட்டணமாக ரூ.7800 கட்டினால் போதும்"

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடைபெறுகிறது.

பயணிகளுக்கு செய்துகொடுக்கும் வசதிகளுக்கு ஏற்பவே கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கூறி உள்ளது.

ஆம்னி பேருந்துகள் குறித்த புகாருக்கு 1800 4256 151 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 ஆம்னி பேருந்து கட்டணங்களில் வரையறை உள்ளது, எதிர்காலங்களில் சட்டத்தை வலுப்படுத்தி சரியான நடைமுறை மேற்கொள்ளப்படும் என அன்வர்ராஜா எம்.பி கூறினார்.

Next Story