தீபாவளி சிறப்பு பஸ்களில் அமைச்சர் ஆய்வு பயணிகளிடம் குறைகள் கேட்டார்


தீபாவளி சிறப்பு பஸ்களில் அமைச்சர் ஆய்வு பயணிகளிடம் குறைகள் கேட்டார்
x
தினத்தந்தி 17 Oct 2017 12:24 AM IST (Updated: 17 Oct 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பிற்பகலில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை ஊரப்பாக்கம், தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்), சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களுக்கு சென்றார்.

அங்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பஸ் நிலையங்களில் பணியில் இருந்த பணியாளர்களிடமும், பயணிகளிடம் பேசினார். பஸ் புறப்பாடு மற்றும் வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா? என்றும் கேட்டார். இந்த ஆய்வின்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அனந்த பத்மநாபன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல்கள் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story