எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் மீண்டும் சந்திப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் மீண்டும் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 7:00 PM GMT (Updated: 17 Oct 2017 5:33 PM GMT)

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் மீண்டும் சந்திப்பு

சென்னை, 

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையொட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி பண்டிகையான இன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் கடந்த 15–ந் தேதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியமும் அனுமதி அளித்தது. எனவே மெர்சல் படம் வெளியாவதற்கு இருந்த தடை நீங்கியது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியதாக தெரிகிறது.

மெர்சல் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை மீண்டும் நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Next Story