கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி
x
தினத்தந்தி 19 Oct 2017 4:30 AM IST (Updated: 19 Oct 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையினை கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2017 செப்டம்பர் மாதத்துக்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் 17.10.2017 அன்று வழங்கப்பட்டது.

நிதி பெறுவோர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story