முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:ஓராண்டுக்குப்பிறகு வெளியே வந்தார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்.
சென்னை,
முரசொலி பவள விழா கண்காட்சி அக்.10 வரை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். ஒரு ஆண்டாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். ஓராண்டுக்குப்பிறகு பொதுவெளியில் கருணாநிதி வருகை புரிந்துள்ளார். திமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story