மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு
மெர்சல் படத்தில் இடம்பெற்று உள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்லி தவறான கருத்து பரப்பப்படுகிறது. படத்தில் உள்ள தவறான கருத்துகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். இதேபோன்று பிற பாரதீய ஜனதா தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பா.ஜனதா சார்பில் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை தவறாக விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்று உள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் உறுதியளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story