‘மெர்சல்’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி


‘மெர்சல்’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2017 1:36 AM IST (Updated: 21 Oct 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகம் திருட்டு வி.சி.டியால் தத்தளிக்கும் சூழ்நிலையில் தற்போது இணயதளங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சென்னை,

தமிழ் பட உலகம் திருட்டு வி.சி.டியால் தத்தளிக்கும் சூழ்நிலையில் தற்போது இணயதளங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. படங்கள் திரைக்கு வந்ததுமே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகிறது.

ரஜினிகாந்தின் கபாலி படத்தை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டு தடை விதித்த பிறகும் அதையும் மீறி படம் திரைக்கு வந்த சிறிது நேரத்திலேயே இணையதளத்தில் வெளியானது.

சமீபத்தில் திரைக்கு வந்த விஷாலின் துப்பறிவாளன் படமும் இணையதளத்தில் வெளியானது. இதனால் திருட்டு இணையதளங்களை முடக்கும் பணிகளில் தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த விஜய்யின் ‘மெர்சல்’ முழு படமும் இணையதளத்தில் வெளியாகி விட்டது.

அதில் இருந்து பலரும் மெர்சல் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தார்கள். ரூ.125 கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்த படம் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story