100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு


100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்:  முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2017 9:07 PM IST (Updated: 21 Oct 2017 9:07 PM IST)
t-max-icont-min-icon

100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என தாம்பரத்தில் அக்கட்சியின் 46வது ஆண்டு தொடக்க விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார்.

தாம்பரம்,


அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்பொழுது, எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது தமிழகம்.

227 தொடக்க பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 402 உயர் நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டுக்கு ஆளானது தமிழகம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா, காங்கிரஸ் என காலத்துக்கு தக்கவாறு அடிக்கடி அணி மாறுவது தி.மு.க. 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி தி.மு.க. என அவர் பேசினார்.


Next Story