சேலம் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்; மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை


சேலம் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்; மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2017 12:19 PM IST (Updated: 22 Oct 2017 12:19 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி பல உயிர்களை பலி கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் வளர ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.

இந்த நிலையில், சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது, தனியார் மருத்துவமனை ஒன்று டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த மருத்துவமனை அபாயகரமான மருத்துவ கழிவுகளை அகற்றாததால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, டெங்கு கொசு புழுக்கள் உருவாக காரணமாகவும் இருந்ததால் அந்த மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story