டெலிபோனில் எனக்கு கொலை மிரட்டல் டாக்டர் தமிழிசை புகார்


டெலிபோனில் எனக்கு கொலை மிரட்டல் டாக்டர் தமிழிசை புகார்
x
தினத்தந்தி 23 Oct 2017 5:43 AM GMT (Updated: 23 Oct 2017 5:43 AM GMT)

டெலிபோனில் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது என தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை புகார் அளித்துள்ளார்.

சென்னை,

மெர்சல் பட விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்மநபர்கள் மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக தமிழிசை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நேற்று மாலை 4 மணி வரையில் என்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதுபோன்று போனிலும், சமூக வலைத்தளங்களிலும் என்னை விமர்சித்து வருவது தவறான அணுகு முறையாகும். மிரட்டல்களை கண்டு நான் அஞ்சமாட்டேன். மெர்சல் குறித்து எனது கருத்தையே பதிவு செய்தேன். தவறாக பதிவிடவில்லை. இப்போதும் எனது முடிவில் உறுதியாகவே உள்ளேன். ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துக்கள் உள்ளதால் தான் மெர்சல் படத்தை எதிர்த்தோம், கருத்து சுதந்திரத்தை பறிக்கவில்லை -   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story