வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை மைய இயக்குனர் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு வடகிழக்கு பருவமழையின்போது தான் அதிக மழையை பெறுகிறது. அந்த மழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் மக்களுக்கு உள்ளது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகி வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவு 31 செ.மீ., ஆனால் இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ.
வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
வானிலை நிலவரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையுடன் (புதன்கிழமை) தென் மேற்கு பருவ மழை முடிந்து விடும். தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயன் அடையும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
கடலூர் 5 செ.மீ., தாமரைப்பாக்கம் 4 செ.மீ., புதுச்சேரி, வானூர் தலா 3 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம், திண்டிவனம் தலா 2 செ.மீ., கேளம்பாக்கம், அண்ண £பல்கலைக்கழகம் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story