சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்


சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 5:51 AM IST (Updated: 4 Nov 2017 5:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

ராயபுரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் ஒருசில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மழைநீரை வடிய செய்துள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மழையின்போது ரூ.1,100 கோடியில் 386 கிலோ மீட்டர் தூரம் வடிகால்வாய்கள் அமைக்க ஜெயலலிதா அறிவித்தார். அதில் 300 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்துவிட்டன. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் ஜெய்கா திட்டத்தில் ரூ.1,800 கோடி செலவில் இதுபோன்ற பணிகள் தொடங்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story