சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர். திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர். திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 4 Nov 2017 6:24 AM IST (Updated: 4 Nov 2017 6:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர். திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், மழை குறையும் பட்சத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.


Next Story