ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடிக்க உதவி: ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் கைது


ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடிக்க உதவி: ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2017 4:30 AM IST (Updated: 5 Nov 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் கைது, விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் சபீர் கரீம்(வயது 28). ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் சமீபத்தில் சென்னையில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இதில், சபீர் கரீம் ‘புளுடூத்’ தொழில்நுட்ப உதவியுடன் காப்பி அடித்தபோது, மத்திய உளவுத்துறை போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சபீர் கரீம் காப்பி அடிப்பதற்கு உதவியதாக அவருடைய மனைவி ஜாய்சியும் கைது செய்யப்பட்டு தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாய்சி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவில் சபீர் கரீமின் நண்பர் முகமது சாபீப் கானை(25) சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் சபீர் கரீம் காப்பி அடிப்பதற்கு உதவியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார்.


Next Story