தென் மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கும் டெல்லி வானிலை மையம் அறிவிப்பு
தென் மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை அருகே உருவானது. நேற்று நிலவரப்படி இது தெற்கு ஆந்திர கடலோரத்தில் இருந்து தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதனால் சென்னை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மழை நீடித்தது. சென்னையில் மாலையில் இருந்து படிப்படியாக மழை குறையத்தொடங்கியது. நுங்கம்பாக்கத்தில் 8.6 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 20 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நீண்ட மேகத்திட்டுகளாக தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு கடலோர மாவட்ட பகுதிகளில் நீடிப்பதாக இந்திய வானிலை மையம் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியிலும் தெற்கு அந்தமான் கடலிலும் நீண்ட மேகத்திட்டுகள் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், அந்தமான் நிகோபர் தீவுகளிலும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் 7-ந் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story