தமிழகம்-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை வரை கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்


தமிழகம்-புதுச்சேரியில்  பல்வேறு இடங்களில் நாளை வரை கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்
x
தினத்தந்தி 6 Nov 2017 8:43 AM IST (Updated: 6 Nov 2017 8:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம்-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் வெள்ள நீர் புகுந்து பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. பொதுமக்கள் பணிக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

சென்னையில் நேற்று மழை சற்று குறைந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, கிண்டி, திருவல்லிக்கேணி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் நாளை வரை கனமழை தொடரும் என  இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்து உள்ளது

மழை காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 15செ.மீ மழைப் பதிவானது ,அண்ணாமலை நகர் 14செ.மீ, பரங்கிப்பேட்டை 11 செ.மீ, கீழ்கருவூலம் 10 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்படு உள்ளது.

Next Story